6 70
இலங்கைசெய்திகள்

கொழும்பின் சில உணவகங்களில் எலிகள் மற்றும் பூனைகளின் அதிக ஆதிக்கம்

Share

கொழும்பின் சில உணவகங்களில் எலிகள் மற்றும் பூனைகளின் அதிக ஆதிக்கம

கொழும்பு– புறக்கோட்டை, போதிராஜ மாவத்தையில் உள்ள பல உணவகங்களின் சுகாதார மீறல்களை, ஜிந்துபிட்டி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்று கண்டறிந்தனர்

சமையலறைப் பகுதிகளிலும், சமையல் பாத்திரங்களுக்குள்ளும் கூட எலி எச்சங்கள் இருப்பது உட்பட, சுகாதாரமற்ற நிலைமைகள் இந்த ஆய்வின்போது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உணவு தயாரிக்கும் பகுதிகளில் செல்லப் பூனைகள் சுற்றித் திரிவதும் கண்டறியப்பட்டது இதன்போது, குறித்த சுகாதார மீறல்களுக்காக உணவக உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

எனினும், எலிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மாநகரசபை மீது குற்றம் சாட்டி சிலர் தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தினர்.

இதன்போது, உணவக உரிமையாளர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுகாதாரமற்ற நிலையில் இயங்குவதாகக் கண்டறியப்பட்ட அனைத்து உணவகங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...