IMG 20220823 WA0040
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வல்வெட்டித்துறை தலைவராக சுரேன்!

Share

வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

அதன் போது தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினருக்கு ஆதரவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர், சுயேட்சை குழுவை சேர்ந்த நால்வர் , விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவர் ஆகிய 8 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இவருடன் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உறுப்பினர் க.சதீஸ்க்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆறு பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் இருவருமாக 08 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

அந்நிலையில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் 08 வாக்குகளை பெற்று சமனிலையாக காணப்பட்டமையால் திருவருள் சீட்டு மூலம் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் இ.சுரேன் தவிசாளராக தெரிவானார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...