அரசிலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும்.
எனவே, முட்டாள்தனமாக எவரும் மக்களை முட்டாளாக்க நினைக்ககூடாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
” அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாமே இதை கொண்டு வருகிறோம்.
இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தனிநபர்களுக்கு எதிரானது என காட்டி தப்ப எவரும் முயல கூடாது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் நாம் பிரேணைகளை கொண்டு வருகிறோம். இவர்கள் இருவரையும் காட்டு காட்டென நாம் காட்டுவோம். ஆனால் இது முதலில் ஜனாதிபதி கோட்டாபயவின் முழு அரசுக்கும் எதிரானதாகும்.
அரசிலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும். ஆகவே முட்டாள்தனமாக எவரும் மக்களை முட்டாளாக்க நினைக்க கூடாது.” – என்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment