ஜனாதிபதி பதவி விலகினாலே ஆதரவு! – அநுர விடாப்பிடி

Anura kumara dissanayakka

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கான தீர்வு திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயார்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி பதவி விலகாமல், அரசால் முன்வைக்கப்படும் யோசனைகளை ஏற்பதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

2001 இல் நெருக்கடி ஏற்பட்டபோதும், தேர்தல் நடத்தப்படும்வரை ஜே.வி.பி. அரசுக்கு நேசக்கரம் நீட்டியிருந்தது என்பதையும் அநுர நினைவு கூறினார்.

அதேவேளை, மக்கள் போராட்டங்களை, வன்முறையாக மாற்ற வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version