WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்டத்துக்கு ஆதரவு சரியான முடிவே!

Share

” அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்த முடிவு சரியாகும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அவசரகால சட்டத்தை ஆதரிப்பதானது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கைக்கு முரணான செயல்.” என அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் இவ்வாறு பதிலடி கொடுத்தார்.

” கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச போன்றோரை பதவி விலகுமாறு கடிதம் எழுதிய தரப்புகளுடன்தான் தற்போது பீரிஸ் இருக்கின்றார். அது கட்சி கொள்கைக்கு ஏற்ற செயலா?” – எனவும் அவர் கேள்வி எழுப்பினார் .

தவறான திசையில் பயணித்தவர்கள் தவறை, உணர்ந்து மீண்டும் கட்சிக்கு வருவார்கள் என நம்பிக்கையும் வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் தீ விபத்து: குடியிருப்பு முற்றாக எரிந்து சாம்பல்!

நுவரெலியா, நானுஓயா பகுதியில் உள்ள கிளாஸ்கோ தோட்டத்தின் மத்திய பிரிவில் இன்று (மார்ச் 21, 2026)...

11 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பேருந்து சேவைகள் 50 சதவீதம் குறையும் அபாயம்: எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு!

இலங்கை முழுவதும் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சீரற்ற தன்மை காரணமாக, பொதுப் போக்குவரத்து...

10 18
உலகம்செய்திகள்

முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்திய ஈலோன் மஸ்க்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

கடந்த 2022-ஆம் ஆண்டு அப்போதைய ட்விட்டர் (தற்போது X) நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, அதன்...

09 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததா? அருட்தந்தை ரோஹான் சில்வா கேள்வி!

2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து, முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்...