இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இரண்டு மாதங்களுக்குப் பின் சுப்பர் டீசல் கொண்டுவரப்போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் 100 000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் மற்றும் டீசலுடன் இலங்கையை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய எரிபொருள் அட்டை திட்டத்தின் கீழ், அரச வாகனங்களைப் பதிவு, அத்தியாவசிய எரிபொருள் தேவைகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபையின் பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
#SriLankaNews
Leave a comment