super delta
இலங்கைசெய்திகள்

சுப்பர் டெல்டா (Super Delta) திரிபு – ஒரு வாரத்துள் அறிக்கை

Share

சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு (Super Delta) கொழும்பு மற்றும் அதைச் சூழவுள்ள பகுதியில் பரவுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்பதனை கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான நிறுவனத்தால் டெல்டா வைரஸ் திரிபு தொடர்பாக மேற்கொண்ட பரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாட்டில் சில பகுதிகளில் டெல்டா வைரஸின் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து பல்கலைகழகத்தின் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பதிலளிக்கையில், வைரஸ் தொற்று பரவும் வேகத்தை அவதானிக்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே அதனை உறுதிப்படுத்த எமது பரிசோதனை குழு பரிசோதனை மேற்கொண்டு, ஒரு வாரத்துள் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6956109675232
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர வெடிவிபத்து: பலர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் (Bar) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கிப்...

WhatsApp Image 2025 07 30 at 10.13.14 1
இலங்கைஅரசியல்செய்திகள்

குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தல்!

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில்...

MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப்...

feeffef8b9eb82ce9b06f1c9550878a1460042ec
செய்திகள்அரசியல்இலங்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை: வாகன இறக்குமதியை நிறுத்த முடியாது!

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது...