நாடாளுமன்றத்தின் கீழ் அமைக்கப்படும் சட்ட மறுசீரமைப்புக் குழுவுக்குத் தலைமை தாங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு உரையாடினார்.
அரசுக்கு ஆதரவு வழங்குவீர்களா எனப் பிரதமர் கேள்வி எழுப்பினார். மக்கள் நலன்சார்ந்த மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவதாக நான் பதிலளித்தேன்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment