நாட்டில் சில பகுதிகளில் இன்று (22) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர்எம். ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக, மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்த காரணத்தினால் மின் விநியோகம் தடைப்பட்டது.
இந்நிலைமையை சீர் செய்வதற்கு சுமார் 03 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், மின் துண்டிப்புத் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலார்கள் சங்கம் மற்றும் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கங்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த மின்வெட்டு திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபையில் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இருப்பினும் இதுதொடர்பான குறித்த அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment