மாணவன் கடத்தல்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து தப்பிய மாணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.

தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவன் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று மாலை தனியார் வகுப்பொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வேளை, ஆள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

மாணவனைக் கடத்திச் சென்ற வான் காட்டு பகுதி ஊடாகச் சென்றபோது, வானில் இருந்து பாய்ந்த மாணவன், காயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.

காயங்களுடன் தப்பியோடி வந்த மாணவனை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலையில் சேர்த்தனர்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரிடம், தான் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்கனவே தன் வயதை ஒத்த இரு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர் என்று பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...