மரவள்ளிக்கிழங்குடன் போராட்டம் (படங்கள்)

வலிதென்மேற்குப் பிரதேச சபையில் பந்த மேந்தி மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் விலையேற்றத்தையும் மக்கள் படும் இன்னல்களையும் கண்டித்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, தமிழ்த்தேசியமக்கள் முன்னணி, ஜக்கிய தேசிய கட்சி, சுயேட்சைக்குழு , என்பன இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Cassava 02

இதன்போது பந்தங்கள் ஏற்றியதுடன், விறகுக்கட்டைகள் என்பவற்றை சுமந்து பாணுண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து குறித்த பந்தங்கள் கொண்டு, மரவள்ளிக்கிழங்கு சுட்டு உண்டதுடன் நிறைவில் மரவள்ளிக்கிழங்கு அவித்து சம்பலுடன் உண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

#SrilankaNews

Exit mobile version