ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றும் வெளியிடப்படவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கால சர்வக்கட்சி அரசை அமைக்குமாறு பங்காளிக்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை அரசு நிராகரித்துள்ளதாலேயே, அரசை விரட்டும் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews