யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொழுது மீண்டும் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கும் ஒரு மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று தீர்ப்பளித்தார்.
இருபாலை பகுதியைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனவே இவர்கள் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று உள்ளது.
இந்நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொழுது தங்களுக்கு மோதி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் நேற்று இடம் பெற்றது.
இவரும் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இரண்டு நபர்களையும் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொழுது போலீசார் நேரடியாக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.
இருவரையும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்குமாறு நீதவான் இன்று தீர்ப்பளித்தார்.
Leave a comment