20220628 104847 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை! – தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு

Share

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதில் நாம் அக்கறையைக் கொண்டுள்ளோம். இவ்வாறான பிரச்சினைகளை மூடி மறைக்காது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுடன் சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் கூடுதலான கரிசனை எடுத்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களது குடும்பத்தினர் மீதும் பொது அமைப்புகள் எச்சரிக்கையை விடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களை செய்பவர்கள் வெளியிலிருந்து வரவில்லை. எமது சமூகத்தின் வலியை புரிந்தவர்களே இவ்வாறான செயல்களை செய்கின்றார்கள்.

முல்லைத்தீவு பாடசாலை சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டாலும் இன்னமும் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு அதற்கான தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி மகளிர் அமைப்புகள் இந்த விடயத்தில் அமைதியாக இருப்பது ஏன் என புரியவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது மகளிர் சமூகத்தினர் எங்கே தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நாடு இருக்கும் பொருளாதார பிரச்சினையில் இவ்வாறான பிரச்சினைகளும் அதிகரித்து காணப்படுகின்றது.

பல குற்றச்செயல்கள் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட ஏனைய சமூக விரோதமான செயற்பாடுகள் யாழ் மாவட்டத்திலும் சரி முல்லைத்தீவிலும் சரி வடக்கிலும் சரி இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறானவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதில் நாம் அக்கறையைக் கொண்டுள்ளோம். இவ்வாறான பிரச்சினைகளை மூடி மறைக்காது நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் கூடுதலான கரிசனை எடுத்து செயற்படவேண்டும்.

எரிபொருள் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

மக்கள் வீதிகளில் நிற்கின்றார்கள். ஆனால் எரிபொருள் விநியோகம் எப்போது என தெரியாது. ஆனால் எமது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் காணவில்லை. மக்கள் வரிசைகளில் காணப்படும்போது இன்று வரைக்கும் எந்த ஒரு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களை சந்தித்ததாக தெரியவில்லை. மக்களுடைய ஆதங்கங்களை புரிந்துகொண்டு கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும். உங்களால் அந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனாலும் கூட மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக கூட மக்களுடன் களத்தில் இறங்கி இருக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...