கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய 500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளந என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் டொலருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தப் பொருள்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிழங்கு, வெங்காயம், பருப்பு, ரின்மீன் மற்றும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களே இவ்வாறு விடுவிக்கப்படாமல் தேங்கி உள்ளன என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a comment