sakthivel
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நிலை!

Share

“அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு இன்று வரை நிலைநாட்டப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் தமது விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பே உள்ளது” – என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் தாம் கைதுசெய்யப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை நீதிமன்றத்துக்கு அழைக்காதிருக்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நியாயம் கோரியும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த விடயத்தில் அரசும், நீதி அமைச்சும் கவனம் செலுத்தி இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு நியாயத்தை நிலைநாட்டுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அவசர வேண்டுகோளை விடுகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து அமுல்படுத்துவதற்கான நியாயத்தைக் கற்பிக்கவும் சர்வதேசத்தை ஏமாற்றும் புலி உருவாக்கம் என அண்மைய காலங்களில் தமிழ் இளைஞர்கள் தொகையாகக் கைதுசெய்யப்பட்டனர்.

சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என்று வெளி உலகத்துக்குக் காட்டவும் கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் புலி உருவாக்கும் எனக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருசிலரை ஆட்சியாளர்கள் பிணையில் விடுவித்தனர்.

மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் எடுக்காது காலத்தை இழுத்தடிப்புச் செய்வது நியாயத்தை மறுக்கும் திட்டமிட்ட செயலாகும். இதனை அனுமதிக்க முடியாது.

இந்நிலையில் இவர்கள் தமக்கு நியாயம் வேண்டியும், ஒட்டுமொத்த அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பது குடும்பத்தாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்களை உணவு தவிப்புப் போராட்டத்தில் இருந்து மீட்குமாறும், உடல் நிலையைக் கவனத்தல் கொண்டு விடுதலையை வலியுறுத்துமாறும் கேட்கின்றனர்.

அரசியல் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் வாடுவோர் தமது விடுதலைக்காகப் பல தடவைகள் போராட்டம் நடத்தி உள்ளதோடு சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி அத்தகைய போராட்டங்கள் கைவிடப்பட்டாலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு இன்று வரை நிலைநாட்டப்படவில்லை. இந்நிலையில், அவர்களும் மீண்டும் தமது விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பே உள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கும் காலகட்டத்தில் மிக அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரை பிணையில் அனுப்பிவிட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசு நாடகமாடும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் இதனைக் கருத்தில்கொண்டு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் விடுதலையாகுவதற்கு கூட்டுச் செயற்பாட்டை முதன்மைப்படுத்துமாறு அரசியல் கைதிகளின் பெற்றோரோடு அரசியல் கைதிகளின் தேசிய அமைப்பும் கேட்டுகொள்கின்றது” – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...