இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) நாட்டில் Starlink இணையச் சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (டிஆர்சி) தனது டுவிட்டர் செய்தியில், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, ஒழுங்குபடுத்தும் விடயங்கள் மற்றும் இந்தச் சேவைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பாக முதன்மையாக கலந்துரையாடப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் தனது ட்விட்டர் தளத்திலும் இதனை பகிர்ந்துள்ளது.
#SriLankaNeews
Leave a comment