24 6657d4809cfa1
இலங்கைசெய்திகள்

இலங்கை குடியுரிமை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்

Share

இலங்கை குடியுரிமை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை குடியுரிமையை கைவிட்டவர்கள் உள்ளிட்ட இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கை துணையாளர்கள் ஆகியோர் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்வதற்கான புதிய விதிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு நிரந்தர வதிவிட வீசா உத்தரவு என இந்த வர்த்தமானி அறிவித்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், குடியுரிமை சட்டத்தின் 19, 20 அல்லது 21ம் சரத்தின் பிரகாரம் குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.

மேலும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணையாளர்கள் திருமணம் செய்து கொண்டு ஆறு மாதங்களில் விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் ரத்தானால் குடியுரிமையும் ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அல்லது தாத்தா,பாட்டி இலங்கையில் பிறந்து இலங்கை குடியுரிமை கொண்டவர்களாயின் அவ்வாறானவர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுவர்.

அடிப்படை விண்ணப்பதாரிகளிடம் ஆயிரம் டொலர்கள் அறவீடு செய்யப்படும் அதேவேளை, வெளிநாட்டு வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடம் தலா 400 டொலர்கள் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி 2383/17ம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...