Weather
இலங்கைசெய்திகள்

கரையை கடந்தது தாழமுக்கம்

Share
தென்மேல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள நிலைகொண்டிருந்த தாழமுக்கம் கிழக்கு கரையூடாக வியாழக்கிழமை (02) அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகவும் நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைதினம் (03) அதிகாலைக்கு வலுவிழந்து நாட்டின் மேற்கு கரையூடாக வெளியேறும் என்றும் நாட்டில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மற்றும்  புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் திணைக்களம்  அறிவித்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தென்மேல் வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...