24 664574e10ba7e
இலங்கைசெய்திகள்

ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தில் திருத்தம்

Share

ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தில் திருத்தம்

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (17) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், மின்சார சபை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 10ஆம் திகதி வரை காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.

எவ்வாறாயினும், கடந்த 10 ஆம் திகதி இலங்கை மின்சார சபை உரிய முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு மற்றுமொரு நினைவூட்டலை விடுத்துள்ளது.

இதனையடுத்து முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....