14 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் செயற்பாடு தொடர்பில் இலங்கை கடும் கண்டனம்

Share

இஸ்ரேலின் செயற்பாடு தொடர்பில் இலங்கை கடும் கண்டனம்

லெபனானின் நாகுரா பகுதியில் ஐக்கிய நாடுகளின் அமைதிக்காக்கும் படையணியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌிியி்ட்டுள்ளது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் லெபனானின் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர். மேலும் ஏனைய நாடுகளின் இராணுவத்தினர் சுமார் 20 அளவில் காயமுற்றிருந்தனர்.

இவ்வாறு காயமடைந்த இலங்கை இராணுவத்தினரின் உடல்நிலை தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் லெபனானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை தூதரகம் கூடுதல் அவதானத்துடன் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...