13 11
இலங்கைசெய்திகள்

தொடரும் சீரற்ற காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை

Share

தொடரும் சீரற்ற காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை விடுத்துள்ளது.

மேற்குறித்த கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்பில் தொமிலட மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் கடற்றொழில் சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும், இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...

குருவிட்ட
இலங்கை

குருவிட்ட, பல்லன்சேன சிறைச்சாலைகளின் அமைதியின்மை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள்.

இன்றைய தினம் குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து...