இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரைவில் பதற்றம் ஏற்படலாம்

24 66117805b6ba0

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரைவில் பதற்றம் ஏற்படலாம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரைவில் பதற்றம் ஏற்படலாம் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகம் பேராசிரியர் கீத பொன்கலன் (Geetha Pongalan) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் காணப்படும் மிக சிறிய நிலப்பரப்பு கச்சதீவு ஆகும்.இதனை சட்டரீதியாக எழுதி கொடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதனை கோருவது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

இருப்பினும், ஒப்பந்தத்திற்கமைய இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சதீவினை பயன்படுத்திக்கொள்வதற்கு இலங்கை இராணுவம் தடைவிதிக்கும் பட்சத்தில் இதற்கு இந்தியா பல வாதங்களை முன்வைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சீனா போன்று ஏனைய நாடுகள் இலங்கையின் ஊடாக கச்சதீவில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் அவை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக நிலவும் போது இந்தியா மீண்டும் கச்சதீவு விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version