tamilni 53 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்ட பெருந்தலைவர் என மொட்டுக்கட்சி முக்கியஸ்தர் புகழாரம்

Share

நாட்டை மீட்ட பெருந்தலைவர் என மொட்டுக்கட்சி முக்கியஸ்தர் புகழாரம்

எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியை தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர்.

அந்தச் சிலரின் சதித் திட்டம் வெற்றியளிக்காது. ஏனெனில் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் உள்ளார்கள்.

வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அரசும் கவிழும். அந்த நிலைமை ஏற்பட மொட்டுக் கட்சி இடமளிக்காது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தப் பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கின்றோம்.

அவர் ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்க மறுத்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை படுமோசமடைந்திருக்கும். அவரை மாதிரி சிறந்த ஒரு தலைவர் இன்று இல்லை என்பதை நான் வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...