இலங்கை மீனவர்கள் கைது!

boat

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 11 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் 2 மீன்பிடி படகுகளில் வந்த மீனவர்களை கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கலிங்கப்பட்டினத்தில் இருந்து சுமார் 175 கடல் மைல் தொலைவில் உள்ள இந்திய கடல் வலயத்தில் இந்த மீனவர்கள் குழு மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காக்கிநாடா பொலிஸ் நிலையத்தில் நேற்று (12) ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய கடற்றொழில் திணைக்களத்தினால் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#India #SriLankaNews

Exit mobile version