24 6656a002b9f16
இலங்கைசெய்திகள்

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

Share

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2001இல் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்கு சென்றபின் சதாசிவம் சிவகங்கனுக்கு (Sathasivam Sivagankan) புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற 2004 முதல் 2005 வரை இலங்கைக்கு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இலங்கையர்களை கடத்தும் சர்வதேச குழுவின் முன்னணி உறுப்பினராக சிவகங்கன் இருப்பதாக பிரான்ஸின் சட்டத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ருமேனியா, இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி, உக்ரைன், ஸ்லோவேனியா மற்றும் ஒஸ்திரியாவிலிருந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வளர்ச்சியில் பிரான்சுக்கும் இலங்கையர்கள் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டால் சிவகங்கன் பத்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

இந்நிலையில் இங்கிலாந்தின் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர் விரைவில் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்படவுள்ளார். அதுவரை அவரை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...