ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த ரிஷிதா பிரியங்கா அனுராத என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேலைவாய்ப்புக்காக ஜப்பான் சென்ற இளைஞன் பணத்தை சேகரித்து தனக்கு பிடித்த அதிநவீன மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்துள்ளார்.
தனது கனவு நனவாகி 24 மணிநேரம் முடிவதற்குள் அதே மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவரது பதிவு மறைவதற்கு முன்னர் அவர் உயிரிழந்து விட்டதாக நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் காதலியும் விரைவில் ஜப்பான் சென்று அவரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.