இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை

Share

இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த வருடத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

நேற்று (20.07.2023) வரை 714,598 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஜூலை 20 நாட்களில் மட்டும் 90,724 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையாக 15,330 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

10,184 பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 5963 பேரும், ஜேர்மனியிலிருந்து 5141 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு முழுவதும் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலை – டயகம வீதியில் பேருந்தும் பாடசாலை வேனும் மோதி விபத்து: மாணவர்கள் காயமின்றித் தப்பினர்

தலவாக்கலை – டயகம பிரதான வீதியின் ஹோல்புறூக் நகருக்கு அருகாமையில் இன்று (மே 12) காலை...

world 80
செய்திகள்உலகம்

இளம்பெண்களின் அந்தரங்கத் தேடல்: ஆபாசப் படங்கள் குறித்த வெளிப்படையான பார்வைகள்

பெண்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்களா அல்லது இது ஆண்களுக்கு மட்டுமே உரியதா என்ற விவாதம் தற்போது...

world 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடக்கம்: யாழ்ப்பாணத்தில் நினைவு ஊர்தி பயணம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது, இன்று (மே 12) யாழ்ப்பாணம் நல்லூரில்...

world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க பேராதனை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பீடத்தில் முதுதத்துவமாணி (M.Phil) பயின்று வந்த விரிவுரையாளர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட...