tamilni 325 scaled
இலங்கைசெய்திகள்

அனுமதி கோரிய சீனக்கப்பல்: மறுப்பை வெளியிட்ட இலங்கை

Share

அனுமதி கோரிய சீனக்கப்பல்: மறுப்பை வெளியிட்ட இலங்கை

இலங்கையின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முயன்ற சீன ஆய்வுக் கப்பலுக்காகன அனுமதியை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இந்நிலையில், தமது பெயரைக் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக சீன அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong 3, இலங்கை மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆய்வுக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை மற்றும் மாலைதீவுகளிடம் இருந்து சீனா முறைப்படி கோரியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன.

இருப்பினும், இந்திய ஊடகத்தின் அறிக்கையின்படி, கப்பலின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்தது.

விஞ்ஞான ஆய்வு என்ற போர்வையில் உளவுத்துறை தரவுகளை சேகரிக்கும் நோக்கில் இந்த ஆராய்ச்சி பணியை சீனா பயன்படுத்துவதாக இந்திய ஊடகங்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டின.

அதேநேரம் மாலைத்தீவில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி, சீனாவின் சார்புடையவர் என்ற வகையில், அவர் இந்த கப்பலுக்கு அனுமதியை வழங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ஏற்கனவே அவர் மாலைத்தீவில் நிலைக்கொண்டுள்ள இந்திய படையினரை விலகிச்செல்லுமாறும் கோரியிருந்த நிலையில் சீனக்கப்பலுக்கு அனுமதி வழங்கினால், அது இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Share
தொடர்புடையது
4
இந்தியாசெய்திகள்

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்?

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக பிரச்சாரம் நடந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக பலரும்...

3
இந்தியாசெய்திகள்

அரசியல் பயணத்தில் விஜய் அப்படி செய்தது வருத்தமளிக்கிறது… பிரபல நடிகை

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த ஒரு விஷயம் பரபரப்பின் உச்சமாக இன்னும் பேசப்படுகிறது....

2
இந்தியாசெய்திகள்

விஜய்க்கு ஆதரவாக பதிவிட்ட நண்பர் சஞ்சீவ்! வைரல் பதிவு

கரூரில் விஜய்யின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக...

25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...