ரணிலின் மேடையில் பிள்ளையானால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சாணக்கியன்
தமிழரசு கட்சிக்காரர்களே சாணக்கியனை தோற்கடிக்கப் போகின்றார்கள், அவரை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இல்லையென இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – பாலையடிவட்டையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் பிரச்சினைகள் வந்தபோது நாடு பற்றி எரிந்த போது அதைக் கண்டு பயந்து ஓடிய தலைவர்கள் மீண்டும் ஒருமுறை வந்தால் இந்த நாடு என்னவாகும் தலைவர்கள் என்றால் சவால்கள் வருகின்றபோது அதனை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அதை இந்த ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான் செய்தார் என்றும் பிள்ளையான் சுட்டிக்காட்டியுள்ளார்.