29 1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் தொடர்பில் வெளியாகும் போலித் தகவல்கள்

Share

ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் தொடர்பில் வெளியாகும் போலித் தகவல்கள்

ஜனாதிபதி தேர்தல் களத்தில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களுள், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக போலியான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்று முன்னாள் ஆளுநர் எம்.அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடன் செலுத்த முடியாத நாட்டை மீட்டெடுத்து இந்தளவு மக்களை கொண்டு கூட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதே பாரிய வெற்றியாகும். சஜித் அணியில் இறுதியாக 20 பேர் மட்டுமே எஞ்சப் போகிறார்கள். ஏனையோர் ஜனாதிபதியுடன் கைகோர்க்கவுள்ளனர்.

அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக போலி தரவுகளை வெளியிடுகின்றார். ஜே.வி.பியின் வரலாறுகள் மக்களுக்கு இன்றும் மறக்கவில்லை. அவ்வாறானவர்களிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா.?

மறுமுனையில் சஜித் பிரேமதாச சம்மாந்துறையில் 300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரையில் வீடுகள் கட்டவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அவற்றை வெற்றிகொள்ளும் சர்வதேச தொடர்புகளும், நாட்டின் செயற்பாடுகள் பற்றிய அறிவும் நாடாளுமன்றத்தில் வேறு எவருக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...