8 20 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Share

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 அல்லது 28 ஆம் திகதி இடம்பெறும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில்,செப்டெம்பர் 21 அல்லது 28ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என கூறப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் 16 முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்பட வேண்டும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமையவே குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பின்னர் ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 28 முதல் 42 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் கட்டாயமாக சனிக்கிழமை நாளொன்றில் நடத்தப்படும் எனவும், அதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் அது தொடர்பான தபால் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...