3 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

Share

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

இலங்கையில் கோட்டாபயவின் (gotabaya rajapaksa)ஆட்சிக்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏறபட்டு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் நாளாந்தம் மக்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்றனர்.

ஆனால் அந்த வரிசை யுகத்தை ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இல்லாதொழிததார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது. அதுவும் அநுர குமாரவின் (anura kumara dissanayake)ஆட்சிக்காலத்தில்.

முன்னார் தேங்காய் விலை உயர்வு மற்றும் கடும் தட்டுப்பாடு காரணமாக கட்டுப்பாட்டு விலையில் அதனை வழங்குவதற்காக அரசாங்கம் தேங்காய்களை வழங்கியபோது அதனை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

தற்போது அரிசி விலை உயர்வு காரணமாக மீண்டும் அந்த வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான வரிசை யுகம் அம்பலாந்தோட்டையில் கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு இன்று(06) சிவப்பு அரிசி விநியோகிக்கப்பட்டட நிலையில் ஆரம்பமாகியுள்ளது.

கிலோகிராம் ஒன்று 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று அரிசி வாங்கியதுடன், குறைந்த அளவு அரிசியே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரிசி வாங்க வந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...