un
இலங்கைசெய்திகள்

இலங்கை வறுமைக்கோட்டின் கீழ் செல்லும் நிலை! – ஐ.நா எச்சரிக்கை

Share

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில், குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சனத்தொகையில் 26 சதவீதத்திற்கு சமமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைத் தயாரிக்க இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் 11 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 871 குடும்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்துப்பொருட்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க தவறினால், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 12 மில்லியன் வரை இரட்டிப்பாக அதிகரிக்கும் எனவும், இந்த நிலைமையானது நாட்டை வறுமைக்கோட்டின் கீழ் கொண்டு செல்லும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலைமையில் மக்கள் மூன்று வேலை உணவு உட்கொள்வதை தவிர்த்துள்ளதாகவும், மக்களுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமை, மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது பணிக்கு அமர்த்துதல், சொத்துக்களை விற்றல் போன்ற செயற்பாடுகள் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியில் நாட்டின் சுகாதார கட்டமைப்பும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் களவுகள் அதிகரித்துள்ளதாகவும், பணிக்காகவோ அல்லது நிரந்தரமாக தங்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் குடும்ப கட்டமைப்பு வீழ்ச்சியடைய பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...