6 9 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Share

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இந்த முறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிககும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அதிபர் தரம் IIIஇற்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள 4715 பேருக்கு இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம்.

தற்பொழுது நாட்டில் மின்சாரக் கட்டணம் அதிரிக்கப்படவில்லை. மாதம் ஒன்றுக்கான கட்டணம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பிழையான ஒரு தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மின்சார கட்டணம் ஒரு போதும் அதிகரிக்கப்படவில்லை. 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட கட்டணம் ஒருபோதும் சாதாரண மக்களை பாதிக்காது.

நூற்றுக்கு 17 ரூபா 18 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது பொய்யான தகவல். அரசாங்கம் என்ற ரீதியில் , மின்சார சபை நட்டத்தில் இயங்குகிறது. ஆனால் அதனை பராமரிக்க அரசாங்கத்திற்கு முடியாது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பாரிய முதல் ஒன்று செலவாகும் பட்சத்தில் அதற்கான செலவினை மின்சார கட்டணத்தில் தான் அறவிட முடியும். சாதாரண மக்களுக்கு இந்த 30 ரூபா கட்டணம் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...