சீன கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த பரிந்துரை

tamilni 406

சீன கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த பரிந்துரை

சீன ஆராய்ச்சிக் கப்பலான சி யான் 6 இலங்கைத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அதன் செயல்பாட்டுப் பகுதி குறித்து இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்று இலங்கை அரச உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் நங்கூரமிடுவதற்கு கொழும்பு துறைமுகத்தை இலங்கை பரிந்துரைத்துள்ளது.

எனினும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் அந்த தரப்புக்களை கோடிட்டு செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் அக்டோபரில் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version