யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது.
குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிகக் கொட்டில் ஒன்றில் குறித்த அலுவலகம் இயங்கி வந்த நிலையில், அலுவலகத்தின் மேற் கூரையின்றிய நிலையில் காணப்படுகின்றது.
குறித்த அலுவலகத்தினுள் கதிரை மேசைகள் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் சிலவும் காணப்பட்டன.
அலுவலகத்தின் கதவும் பழுதடைந்த நிலையில், திறந்தவாறே காணப்படுவதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் உருவ படம் ஒன்றும் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் இராமநாதன் என் கனவு யாழ். எனக்கூறி, யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகக் கூறி வருகின்ற நிலையில் அவர் தனது அலுவலகத்தையே இவ்வாறு வைத்திருப்பது கேலிக்கிடமாக உள்ளதாக அப்பிரதேச மக்கள் கேலி செய்து வருகின்றனர்.
#SrilankaNews