விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யவில்லை!
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யவில்லை!

Share

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யவில்லை!

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இன சுத்திகரிப்பு அல்ல. மாறாக அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் இடம்மாற்றப்பட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டசம்பவமானது இன சுத்திகரிப்பு அல்ல. மாறாக அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் இடம்மாற்றப்பட்டதுதான் நடந்தது.

இதற்கான மூல காரணம் 1990 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கம் இருந்த காலப்பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஊர்காவல்படையை உருவாக்கி 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அம்பாறையில் முதலாவது தாக்குதல் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பிடிக்கப்பட்டு சுடப்பட்டு எரிக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. இந்த தாக்குதல்கள் பின்னர் மட்டக்களப்பிலும் தொடர்ந்தது.

இந்த பின்னணியில் தான் யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களை பாதுகாப்பாக விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் என்பது வரலாறு.”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...