ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான அலுவலகத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 3,044 மில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 5,457 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து பெறப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டதன் பின்னர், அதற்கான அடிப்படை மதிப்பீடுகள் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், சில ஒதுக்கீடுகள் 25% இலிருந்து 760% வரை பாரிய தொகையால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய வருடாந்த மதிப்பீடுகளை தயாரிப்பதில் உரிய கணக்கியல் உத்தியோகத்தர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் பெருமளவான செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதற்கான சான்றுகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment