tamilnid scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

Share

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபா பெறுமதியுடை பொருள் ஒன்றை கொள்வனவு செய்திருந்தால் அந்த பொருளின் விலை தற்போது 202 ரூபாவாக இருக்கும் என சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டினுடைய பணவீக்கம் குறைந்திருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். 2022ஆம் ஆண்டு 7.8 வீதத்தால் எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது. வரலாற்றில் ஒரு நாளும் அவ்வாறு எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது இல்லை.

கடந்த வருடம் கூட 3.6 வீதத்தால் பொருளாதாரம் சுருங்கியிருந்தது. ஆனால் இந்த வருடம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. பணவீக்கத்தை எடுத்துப் பார்த்தால் 2021ஆம் ஆண்டு 100ஆக இருந்தது தற்போது 202 ஆக இருக்கின்றது.

அதாவது, 2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்திருந்தால் அது தற்போது 202 ரூபா பெறுமதியாக இருக்கும். ஆனால் மக்களுடைய வருமானம் அதிகரிக்கவில்லை. கூலித் தொழிலாளர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களுடைய மாதாந்த வருமானம் குறைந்திருக்கின்றது.

அவர்களுக்கான வேலை நாட்கள் இப்போது இல்லை. இப்போது நாங்கள் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றோம். மக்களுடைய வருமானத்தில் வரி ஈட்டுவது சாத்தியப்படாது. செல்வந்தர்களின் சொத்தில் இருந்து வரியை எடுத்தால் தான் நாங்கள் நாட்டுக்கான முதலீடுகள் அனைத்தையும் செய்யக் கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...