சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு
இலங்கைசெய்திகள்விளையாட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

Share

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

கடந்த ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்க தட்டிச் சென்றுள்ளார்.

ஸிம்பாப்வேயில் நடைபெற்ற ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட நிலையில், அவருக்கு இவ்விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட், ஸிம்பாப்வேயின் சீன் வில்லியம்சன் ஆகியோரும் இவ்விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் இருந்தனர்.

எனினும், இவர்களை விஞ்சி, வனிந்து ஹசரங்க இவ்விருதை வென்றுள்ளார் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நாம் தகுதி பெற்றுள்ளதால், இலங்கைக்கு முக்கியமான ஒரு தருணத்தில் இவ்விருது கிடைத்துள்ளது.

மாதத்திற்கான ஐ.சி.சியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதால் நான் கௌரவமும் அடைந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

சனிந்து ஹசரங்க, கடந்த ஜூன் மாதத்தில் 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதுடன், தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 5 விக்கெட் குவியலையும் அவர் பதிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனர்
இதற்கு முன் வக்கார் யூனிஸ் மாத்திரமே 1990ஆம் ஆண்டில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

கடந்த மாதம் 91 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் பிரிவில் கடந்த ஜூன் மாதத்துக்கான ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைக்கான விருதை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....