ரஞ்சித் மத்தும பண்டார
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர் மனதை வெல்லவே கோட்டாவின் பேச்சு நாடகம்! – சஜித் அணி சாடல்

Share

“சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.”

– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

“கோட்டாபயவின் இந்த நாடகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துணைபோகக்கூடாது. அவர்கள் கடந்தகாலச் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிதானமாகச் செயற்பட வேண்டும்” எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

“பேச்சை மேசையைக் கூட்டமைப்பினர் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்துக் கோட்டாபய அரசைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது” எனவும் சஜித் அணி வலியுறுத்தியுள்ளது.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது. ஆனால், தமிழர்களுக்குத் தீர்வை வழங்க இந்தக் கோட்டாபய அரசு ஒருபோதும் முன்வரமாட்டாது” எனவும் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுகின்றது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...