6 92
இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட நடவடிக்கை

Share

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று பொலிஸாரால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், பாதசாரி கடவைகளில் வாகனங்களை முந்திச் செல்வது மற்றும் அதிவேகமாகச் செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை போக்குவரத்து விதிகளை மீறி தொலைதூர பேருந்து சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்துகளை சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட தூர சேவை பேருந்துகளில் அவர்கள் கணிசமான தூரம் பயணிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் பேருந்தினை நிறுத்தி சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளுக்கு அறிவுறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...