5 51
இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

Share

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்தச் சோதனைகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்புகளுக்காக, மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை காட்சிப்படுத்துவதில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பண்டிகைக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...