நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் வடக்கில் விசேட பொதுமக்கள் நடமாடும் சேவை!

20220804 100723

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நகர விருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் பொதுமக்கள் நடமாடும் சேவை ஒன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பிரதி பணிப்பாளர்திருமதி கவிதா ஜூவகன் தெரிவித்துள்ளார்,

வடபகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை பெற்று கொடுப்பதற்காக பொதுமக்கள் நடமாடும் சேவையானது இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது

முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடத்த எதிர்வரும் 9 ம் திகதி செவ்வாய்க்ககிழமை நகர விருத்தி அதிகார சபையின் வடமாகாண காரியாலயத்தில் முதலாம் மாடியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இரண்டாம் கட்டமாக வவுனியா மாவட்டம் மற்றும் முல்லைத் தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வவுனியா கலாச்சாரம் மண்டபத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இரண்டு பொதுமக்கள் நடமாடும் சேவையும் காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 மணி வரை நடைபெறவுள்ளது

குறித்த நடமாடும் சேவையில் நகர விருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்த அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகரஅபிவிருத்தி பிரதேசமாக பிரகடணப் படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்களது திட்டமிடல் அனுமதிகள் தொடர்பான பிரச்சனைகள் அதாவது கட்டிட கட்டுமானம், காணி தொடர்பான பிரச்சனைகள் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் மேலும் வேறு கட்டிட அனுமதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் நடமாடும் சேவையில்பெற்று கொடுக்கப்படும்

இதில் அபிவிருத்தி திட்டமிடல் அனுமதி தொடர்பாக துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்களின் பங்கு பற்றுதலோடு இந்த பொதுமக்கள் நடமாடும் சேவையானது

நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவே குறித்த நடமாடும் சேவையில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் குறித்த நடமாடும் சேவையில் பங்கு பற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version