தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினா தீவு நாகபூசணிஅம்மன் சிலையினை அகற்ற அனுமதிகோரி யாழ்ப்பாண பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில் 30ற்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்து அமைப்புகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் ,ஸ்ரீகாந்தா,திருக்குமரன் உட்பட மேலும் பல சட்டத்தரணிகளும் இந்து அமைப்புகள் சார்பில் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.
#Srilankanews
Leave a comment