கொரோனா சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட பொலிஸ் நடவடிக்கை நேற்று முதல் மேல் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்தது.
நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் பொலிஸாரின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடும்போது, மேல் மாகாணத்தில் மொத்தம் 23,193 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
முகக் கவசங்களை அணியாத 4,351 பேருக்கு பொலிஸார் முகக் கவசங்களை வழங்கியுள்ளனர்.
அத்துடன், 7,105 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் இன்னும் நாட்டிலுள்ள சிக்கலை புரிந்துக்கொள்ளாமல் சுகாதார விதிமுறைகளை முறையாக பேணத் தயாராகவில்லை.
1,475 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment