ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை இன்று வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும். ஜனாதிபதியின் விருப்பத்துக்கமைய இடைக்கால அரசு அமைய வேண்டும் . அதற்கு வழிவிடும் வகையிலான யோசனையொன்று ஜனாதிபதியிடம் இன்று முன்வைக்கப்பட்டது. நாளைய சந்திப்பிலும் அது பற்றி பேசப்படும்.
நாடாளுமன்றத்தில் 113 என்பதைவிடவும், மக்களின் கோரிக்கையே எமக்கு முக்கியம்.” – என்றார் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க.
#SriLankaNews
Leave a comment