அரசுக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று நாளை இடம்பெறவுள்ளது. இந்த தகவலை அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள உதய கம்மன்பில உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து இன்று நீக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கும் நோக்கில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நாளை கூடுகின்றனர்.
அதேவேளை, எமக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கிலேயே அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் பதவி பறிக்கப்படவில்லை என்று உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment