rtjy 215 scaled
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் வெடிபொருட்களை மீட்கும் அதிரடிப்படையினர்

Share

கிளிநொச்சி – பரந்தனில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் காணி உரிமையாளர்களால் கிணறு துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் இன்று (21.08.2023)நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடி படையினரால் கிணற்றில் இருந்து வெடி பொருட்களை மீட்கும் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பல்வேறு வகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...